2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தொழில் திணைக்களத்தின் செயற்பாடுகள் 11ஆம் திகதி ஆரம்பம்

Editorial   / 2020 மே 07 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இந்த மாதம் 11ஆம் திகதி தொழில் திணைக்களத்தின் கீழ் செயற்படும் நிறுவனங்களை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் ஏ. விமலவீர தெரிவித்தார்.


அதற்கமைய, அத்தியாவசியமான சேவை குழுக்களை மாத்திரம் பயன்படுத்தி, பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதன்போது, தொழில் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை தொழிலாளர்கள் முன்வைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனங்களை கிருமி தொற்று நீக்கி, சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அலுவலக சபையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X