2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நடைப்பயிற்சி பாதைகள், வாரச் சந்தையை திறக்க அனுமதி

Editorial   / 2020 மே 14 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா ஆகிய இரு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், வாரச் சந்தைகளைத் திறந்து நடத்த, பதில் பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை, அனைத்துப் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அவர் அறிவித்துள்ளார்.

குறித்த சந்தைகளில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளும் சந்தையை நாடிவரும் பொதுமக்களும், கட்டாயமாக முகக் கவசங்களை அணிந்திருக்க வேண்டுமென்பது உள்ளிட்ட ஏனைய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும், பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுமக்களின் அன்றாட உடற்பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள நடைபயிற்சிப் பாதைகளையும் திறப்பதற்கு, அனுமதி வழங்கப்பட்டு உள்ளதோடு, அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், உரிய உடற்பயிற்சி ஆடைகளுடன் செல்பவர்கள், அந்தந்த நடைபயிற்சிப் பாதைகளுக்குச் செல்ல பொலிஸார் அனுமதிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X