2025 ஜூலை 19, சனிக்கிழமை

நாட்டில் கொள்கையொன்று இல்லை

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

6. காஞ்சன குமார ஆரியதாச

இந்த நாட்டில் கொள்கையொன்று இல்லையென்பதால், அமைச்சர்களுக்கும் பொதுமக்களும் இரு வேறு கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

நேற்று (22) கலேவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் இருப்பது பொதுமக்களின் பணம் எனினும் கடந்த ராஜபக்ஸ காலத்தின் போது, குறித்த வங்கிகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டு, வீதி கட்டுமாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாலேயே, தற்போது  அந்த கடன் தொகையை பொதுமக்கள் திறைச்சேறிக்கு செலுத்தி வருவதாக சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

சவூதியில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு ஒரு லீற்றர் பெட்ரோலைக் ​கொண்டுச் செல்ல 78 ரூபாய் செலவாவதாகவும் ஆனால் 165 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய ஊடகங்களுக்கும் கொள்கையொன்று இல்லாமையால், அரசியல்வாதிகளால் ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும்  நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X