2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நினைவிடத்துக்கு அருகில் சுமந்திரனின் உருவபொம்மை

Editorial   / 2020 மே 13 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு பின்புறமாக பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு அருகாமையிலையே குறித்த உருவ பொம்மை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

நேற்று இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படிருந்த வேளையிலையே இனம் தெரியாத நபர்களால்  உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிந்து வீதியோர மின் கம்பத்துடன் உருவ பொம்மை கட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X