2025 ஜூலை 21, திங்கட்கிழமை

‘நினைவேந்தல் கூடாது’

Editorial   / 2020 மே 17 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டிருக்கும் ​கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்க முடியாதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறிய அவர், இதன்படி இம்முறை வெசக் கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

நாட்டின் சட்டதிட்டங்கள், இந்நாட்டிலுள்ள அனைத்து இன, மதத்தினருக்கும் பொதுவானதெனத் தெரிவித்த அவர், எனவே, நினைவேந்தல் நிகழ்வுகளிலும் பொதுமக்கள் ஒன்றுகூடுவார்களெனவும், இதனால் இந்நிகழ்வுகளை அனுஷ்டிக்க ​முடியாதெனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X