2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’பந்துல ஒரு கோமாளி’

Editorial   / 2020 மே 08 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலம் பெயர் தமிழர்களின் அழுத்தத்தாலேயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அலரி மாளிகையில் நடைபெற்றக் கலந்துரையாடலைப் புறக்கணித்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மறுத்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பில் நடைபெற்றக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துக்கொள்வதை புலம் பெயர் தமிழ் அமைப்புக்களால் தடுத்து நிறுத்த முடியவில்லையே. ஆனால் எதிர்க்கட்சிகளை நிறுத்திவிட்டனரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுத் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனோவின் பேஸ்புக்கில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “டயஸ்போராவின் அழுத்தத்தினாலேயே ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்கட்சி, பிரதமர் மகிந்தவின் கூட்டத்துக்கு வரவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன கூறுகிறார்.

எந்த டயஸ்போரா பந்துல? தமில் டயஸ்போராவா? அப்படியானால், இந்த தமிழ் டயஸ்போராவினால் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்துக்கொள்வதை நிறுத்த முடியவில்லையே. ஆனால், எங்களை நிறுத்தி விட்டதோ?

கொரோனாவினால் சோர்வடைந்துள்ள மக்களுக்கு நண்பர் பந்துல, நல்ல ஒரு கோமாளியாக சிரிப்பு மூட்டுகிறார்.

முதலில் கூட்டத்துக்கு, நம்பி வந்த கூட்டமைப்பின் கோரிக்கைகளில் எதையாவது கொடுக்க, ஜனாதிபதி, பிரதமரிடம் சொல்லி வழி பாரப்பா!” எனவும் தெரிவித்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X