2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

பிரபல நடிகை சமந்தாவின் தந்தை திடீர் மரணம்

Freelancer   / 2024 நவம்பர் 29 , பி.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு இன்று மாலை உயிரிழந்தார். 

தந்தை உயிரிழப்பு குறித்து சமந்தா தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். 

நடிகை சமந்தா சென்னையில் ஜோசப் பிரபு - நினெட் பிரபு தம்பதிக்கு பிறந்தவர் ஆவார். இவரது தந்தை ஜோசப் பிரபு தெலுங்கு பேசும் ஆங்கிலோ இந்தியன் ஆவார். 

திரையுலக பயணத்திற்கு தன் தந்தை அதிகளவு ஒத்துழைப்பை கொடுத்ததாக சமந்தா பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், சமந்தாவின் தந்தை திடீர் உயிரிழப்பு தகதவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் பலரும் சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமந்தா தந்தை ஜோசப் பிரபுவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .