2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பருப்பு, ரின் மீன் அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்

Editorial   / 2020 மே 03 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 17ஆம் திகதி, ஜனாதிபதியினால் சில பொருட்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் பருப்புக்கான விலை 65 ரூபாய் எனவும், 425 கிராம் ரின் மீனின் விலை 100 ரூபாய்  எனவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது.

மார்ச் 18 முதல் நடைமுறையில் வருவதாக அறிவிக்கப்பட்ட குறித்த அறிவிப்பு தற்போது நீக்கப்படுவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X