Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 04 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கொரோனா விடுமுறையின் பின்னர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்தா, நாடளாவியரீதியில் அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன் சந்திப்புகளை நடத்திவருகிறார்.
அந்த வகையில், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை, நாளை மறுதினம் (06) சந்திக்கவிருக்கும் கல்வியமைச்சின் செயலாளர், விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சத்தால், கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத் திறப்பது, பரீட்சைகள். ஏனைய கள நிலவரங்கள் பற்றி விரிவாக அவர் கலந்துரையாடவுள்ளார்.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், மேற்படி விடயங்கள் தொடர்பாக இரு நாள்களாக தனது அதிகாரிகள் குழாத்தினருடன் கலந்துரையாடி, திட்டமொன்றை வகுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
இதேவேளை, குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து வடக்கு, ஊவா, மத்திய மாகாணங்களின் கல்விப் பணிப்பாளரையும் கல்வியமைச்சின் செயலாளர் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
ஒட்டுமொத்தமாக சகல மாகாணக் கல்விப் பணிப்பாளர்களையும் சந்தித்த பின்னர் ஒரு முடிவுக்கு வரவிருப்பதாகவும் பாடசாலைகளுக்கான விசேட நேர அட்டவணையைத் தயாரிக்கவிருப்பதாக, கல்வியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுவான தரம் 10 அதற்கு மேற்பட்ட வகுப்புகளை முதலில் ஆரம்பிப்பதெனவும் சிலவேளை மாகாணத்திற்கு மாகாணம் விசேட நிகழ்ச்சி நிரலின்படி பாடசாலைகள் திறக்கப்படலாமெனவும் தெரியவருகிறது.
எது எப்படியிருந்தபோதிலும் முன்னர் தெரிவிக்கப்பட்டதுபோன்று, இம்மாதம் 11ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட சாத்தியமில்லையெனத் தெரிகிறது.
22 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
45 minute ago