2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாப்பரசர் பிரான்சிஸிக்கு சஜித் அஞ்சலி

Editorial   / 2025 ஏப்ரல் 25 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச வெள்ளிக்கிழமை (25) காலையில், கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , இலங்கையின் வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரயன் உடெய்க்வேவை சந்தித்து சிறிது நேரம் உரையாடியதைத் தொடர்ந்து தனது இரங்கலை தெரிவித்தார். 

பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் குறிப்பு எழுதி, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவு குறித்து உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X