2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

Editorial   / 2020 மே 07 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 நிவாரண உதவிகளிலும் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

அறிக்கை ஒன்றை விடுத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இவ்வாறு பெருந்தோட்ட மக்கள் மாற்றாந்தாய் பிள்ளையாக கவனிக்கப்படுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதெனவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்காத்துக்கு கூஜா தூக்கும் மலையக பிரதிநிதிகள் சிலர், பெருந்தோட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் சிறப்பாக இடம்பெறுவதாக தெரிவித்து வருவதில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

5000 ரூபாய் கொடுப்பனவுக்காக பெருந்தோட்ட மக்கள் கிராம உத்தியோகத்தர்களாலும்  சமுர்த்தி உத்தியோகத்தர்களாலும் மாறி மாறி ஏமாற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதற் கட்ட செயற்பாடுகள் முழுமைப் பெறாத நிலையில்,  இரண்டாம் கட்டமாக 5,000 ரூபாய் வழங்கும் செயற்பாடுகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளமையின் மூலம் பாரிய எதிர்விளைவுகள் உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இரண்டாம் கட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சூழலில் இரண்டு கட்ட நிவாரண நிதி உதவியை இணைத்து வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X