2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மனைவியுடன் திரையரங்கு போன புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்

Editorial   / 2025 ஜூலை 15 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணமான ஒரு புதுஜோடி, படம் பார்ப்பதற்காக திரையரங்குக்கு சென்றிருந்தது. அந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

சென்னை மந்தைவெளி, எஸ்.பி.ஐ. குடியிருப்பில் வசித்து வந்தவர் மெல்வின் (வயது29). எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடை பெற்றது.

விடுமுறைநாளான  ஜூலை 14 ஆம் திகதி புதுமணஜோடி மெல்வினும், காயத்ரியும் மோட்டார் சைக்கிளில் கேளம்பாக்கம் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள வணிகவளாகத்திற்கு சென்றனர். அங்கு சுற்றி பார்த்து விட்டு அங்குள்ள திரையரங்கில் படம் பார்த்தனர்.

சினிமா பார்த்துக் கொண்டிருந்தபோது மெல்வினுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காயத்திரி தியேட்டரில் இருந்தவர்கள் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மெல்வின் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதனை கேட்டு மனைவி காயத்ரி கதறி துடித்தார்.

இதுகுறித்து கேளம் பாக்கம்  பொலிஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார்  மெல்வினின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மெல்வின் மாரடைப்பால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? வணிகவளாகத்திற்கு வந்த போது எந்த மாதிரியான உணவு சாப்பிட்டார்? உணவு பாதிப்பு ஏதேனும் இருந்ததா? என்று பல்வேறு கோணங்களில் ​பொலிஸார் விசாரித்து வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவை வைத்து அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்து உள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X