2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’முரண்பாடற்ற அறிக்கைகளை வெளியிடவும்’

Editorial   / 2020 மே 11 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய தினம் முழு நாட்டையும் வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டாலும், முரண்பாடற்ற அறிக்கைகளை மக்களுக்கு வழங்கினாலே மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இன்றிலிருந்து நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதாகவும் அரச மற்றும் தனியார் பிரிவுகளின் பணிகளை ஆரம்பிக்குமாறும் அறிவித்தல் விடுக்கும் நிலையில், மறு அறிவித்தல் வரை பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணிகளை ஏற்ற வேண்டாம் எனச் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம், போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும், சஜித் சுட்டிக்காட்டினார்.

எனவே, பொதுப் போக்குவரத்து சேவையைப் பயணிகளுக்காக ஆரம்பிக்காமல், எப்படி வழமையான நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இன்றைய கொரொனா நிலைமைக்குள் அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் பாரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதென்றும் மாறுப்பட்ட, முரண்பாடான அறிவித்தல்கள் கிடைக்குமாயின், மக்கள் மத்திய அரசாங்கத்தின் கட்டமைப்பு ஒழுங்காக செயற்படவில்லை என எண்ணக்கூடும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X