2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’முஸ்லிம்கள் மீதான பாரபட்சத்தைக் கண்டிக்கிறேன்’

Editorial   / 2020 மே 08 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாத பாரபட்சத்தைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன்,  கொரொனா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக கூறி, இஸ்லாமிய பெண்னொருவரின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்காக வேதனையடைவதாகவும் தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள மனோ, “கொரொனாவினால் மரணிக்காத, கொழும்பு முகத்துவாரத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமிய இலங்கை தாயின் உடல், முறை தவறி தகனம் செய்யப்பட்டமைக்காக ஒரு இலங்கையனாக வேதனையடைகிறேன். 

முஸ்லிம் இலங்கையர் சமூகத்தின் மீதான இந்த இனவாத பாரபட்சத்தை கண்டித்து, இந்த நடத்தைக்கு எதிராக பகிரங்கமாக நிற்கிறேன்” எனவும் பதவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X