2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’மே மாத கொடுப்பனவை அரசாங்கத்துக்கு வழங்குங்கள்’

Editorial   / 2020 மே 10 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் தங்களுடைய மே மாத கொடுப்பனவை அரசாங்கத்துக்கு வழங்கி உதவுமாறு,  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச துறை சார்ந்தோருக்கு தங்களுடைய மே மாத கொடுப்பனவை அரசாங்கத்துக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அதேபோன்று,  பிரதேச சபை, நகர சபை மாநகர சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சபைத் தலைவர்கள் உப தலைவர்கள் தங்களுடைய மே மாத கொடுப்பனவை அரசாங்கத்துக்கு வழங்குவது இக்காலத்திற்கு ஏற்ற ஒன்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.

41 நகர சபைகள், 24 மாநகர சபைகள் 276 பிரதேச சபைகளில் நாலாயிரத்து நானூற்று 86 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின்  மாதம் ஒன்றுக்கான கொடுப்பனவுக்காக  சுமார் 7 கோடி ரூபாய் அரச நிதி வழங்கப்படுகின்றது.

எனவே, மே மாத கொடுப்பனவை அரசாங்கததுக்கு வழங்கி உதவுவதற்கு உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் முன்வர வேண்டும் எனவும் பெரியசாமி பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு,  நாட்டை வழமையான நிலைக்கு இட்டுச் செல்வதற்கு அனைத்து தரப்பினரும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவது  இக்காலத்தில் ஒரு கட்டாயத் தேவையாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X