2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

யாழ். அனர்த்த நிலைவரம் தொடர்பாக அறிவிப்பு

S.Renuka   / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலைவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் செவ்வாய்க்கிழமை (02)  வெளியிட்டுள்ளார்.

அதன்படி? யாழ்ப்பாண மாவட்டத்தில் 16,621 குடும்பங்களை சேர்ந்த 52,892 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, தென்மராட்சி,நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம்,காரைநகர்,நல்லூர்,கோப்பாய், உடுவில்,தெல்லிப்பளை,மருதங்கேணி,ஊர்காவற்றுறை,பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 1,710 குடும்பங்களைச் சேர்ந்த 5,443 அங்கத்தவர்கள் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டன. 

செவ்வாய்க்கிழமை (02) அன்று சீரான காலநிலை காரணமாக சில பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் மீண்டும் வீடு திரும்பியதால் தற்போது 803 குடும்பங்களைச் சேர்ந்த 2,570 அங்கத்தவர்கள் 34 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றன.

11,357 குடும்பங்களை சேர்ந்த 35,761 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை  2 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 332 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X