2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வாகன அபராதப் பணத்தை செலுத்தும் காலம் நீட்டிப்பு

Editorial   / 2020 மே 10 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலாவதியான வாகனப் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை செலுத்துவதற்கான மேலதிக சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய இந்த மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை இந்த காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதென, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் தபால்மா அதிபரால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.


ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணம், புத்தளம் மாவட்டம், தனிமைப்படுத்தலுக்காக மூடப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ளவர்கள,; அபராதத் தொகையை செலுத்த முடியாதுள்ள காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X