2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’109’ ஐ ஊக்குவிக்கும் ஊர்வலம்

Simrith   / 2025 ஜூலை 20 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைப் முறைப்பாடு செய்வதற்கான 109 அவசர அழைப்பை ஊக்குவிப்பதற்காக, பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொது விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று சனிக்கிழமை (19) ஆமர் வீதியிலிருந்து காலி முகத்திடல் வரை நடைபெற்றது.

டிஐஜி ரேணுகா ஜெயசுந்தர மற்றும் ஏஎஸ்பி மெரில் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 350 அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பில் துண்டுப்பிரசுர விநியோகம், கண்காட்சிகள், தெரு நாடகங்கள் மற்றும் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் கிடைக்கக்கூடிய ஆதரவு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காலி முகத்திடலில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X