2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

ஆபத்தான வங்கி நடைமுறைகள் குறித்து எச்சரிக்கை

Kogilavani   / 2011 ஜூன் 13 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வாடிக்கையாளர்களின் வைப்புகளில் பாதுகாப்புக்கு ஆபத்தான சில நடைமுறைகள் குறித்து பொலிஸ் மோசடி விசாரணை பணியகம் சர்வதேச வங்கிகள் மற்றும் உள்நாட்டு வங்கிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது என மோசடி விசாரணைப் பிரிவின் தலைவர் மக்ஸி புறொக்டர் கூறினார்.

கொழும்பிலுள்ள வங்கியொன்று, வங்கி ஊழியரின் கவனயீனம் காரணமாக, உரியவரிடம் பணத்தை கொடுக்காமல் வேறு ஆள்மாறாட்டக் காரர் ஒருவரிடம் பணத்தை கொடுத்துவிட்டதாக மக்ஸி புறொக்டர் கூறினார்.

மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த புகார்களில் ஆளடையாளம் காணுவதில் ஒழுங்குகள் கடைப்பிடிக்காமையால் வங்கிகளிடமிருந்து 7,000,000 ரூபா மோசடியாக பெறப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

வெற்றுக் காகிதத்தில் ஒரு வங்கி வாடிக்கையாளரின் கையொப்பத்தை பெற்று அதனை பயன்படுத்தி வாடிக்கையாளரின் கணக்கிலிருந்த 2.5 மில்லியன் ரூபாவை வேறு கணக்கு ஒன்றுக்கு மாற்றிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

ஒரு வங்கி ஊழியர், வெளிநாட்டிலுள்ள ஒரு வாடிக்கையாளரின் வைப்பை களவாக, இன்னொருவரின் கடனுக்கு பிணையாக பயன்படுத்திய ஒரு சம்பவமும் அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே வங்கி வாடிக்கையாளர்கள் தமது கணக்குகளின் விபரங்களை இயன்றளவு ரகசியமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மோசடி விசாரணை பணியகம் பொதுமக்களை அறுவுறுத்தியுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .