2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

5 ஆவது தவணை கடனை விடுவிக்க ஐ.எம்.எப். இணக்கப்பாடு

Freelancer   / 2025 ஏப்ரல் 26 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 05 ஆவது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கைக்கு 344 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளது.

தமது அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இலங்கை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை மற்றும் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு விடயங்களை ஆராய்ந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்தது.

பொருளாதார இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.

அத்துடன், கடன் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளமையினால் 5ஆம் தவணையை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X