2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

600 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Editorial   / 2020 மே 05 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் சிக்குண்டிருந்த சுமார் ​600 பேர் இன்று தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இரண்டாம் கட்டமாக, 23 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இன்று காலை 7 மணியளவில் நுகேகொடை பொலிஸ் மைதானத்திலிருந்து இவர்கள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

தமது சொந்த இடங்களுக்கு செல்லும் குறித்த நபர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்கள், பெண்கள், பிள்ளைகள், சிகிச்சைக்காக கொழும்புக்கு வந்து நீண்டகாலமாக வீடுகளுக்கு திரும்ப முடியாமல் இருந்தவர்களே இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X