Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 31 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய பாதுகாப்புச் சபை கவனத்தில் கொள்ளவில்லையென ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளை மறுத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வியூகம் மாற்றியமைக்கப்பட்டு, நிறுவப்பட்ட தேசியப் பாதுகாப்பு சபை, இரண்டு வாரங்களுக்கு ஒருதடவை கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2019ஏப்ரல் 8ஆம் திகதியன்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் விசேட கூட்டத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை. அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய டுவிட்டரில் இட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊடக அறிக்கையொன்றும் ஜனாதிபதி செயலகத்தால் நேற்று (30 அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடப்படும் விடயங்கள் ஊடகங்களுக்கு வெளியானமையால், வியூகம் அமைத்து இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை, தேசிய பாதுகாப்புச் சபை கூடப்பட்டது. சில மாதங்களி ஜனாதிபதியால் வாரத்துக்கு ஒரு தடவை கூடப்பட்டது.
பொலிஸ் மா அதிபர் தலைமையிலான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் 2019 ஏப்ரல் 8 ஆம் திகதி, ஜனாதிபதி கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். சுமார் 2 மணித்தியாலங்களாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் போதுகூட, பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், யாரும் அறிவுறுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் நடத்தப்படுமென, வெளிநாட்டு சகோதர நாடுகளால், வழக்கப்பட்ட இரகசிய தகவலை பொலிஸ் மா அதிபரோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோ, ஏனைய அதிகாரிகளோ, ஜனாதிபதிக்கு அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான நாடாளுமன்ற விஷேட குழுவின் முதலாவது அமர்வில் சாட்சியமளித்த தேசியப் புலனாய்வுத் தலைவர் சிரிர மெண்டிஸ், “தேசிய பாதுகாப்புச் சபை, பெப்ரவரி 19 ஆம் திகதிக்குப் பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறும் வரையிலும், இரண்டு மாதங்களுக்குக் கூடவே இல்லை” எனச் சாட்சியமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
16 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
4 hours ago