2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது

Editorial   / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடவுள்ளதுடன் இன்​றைய தினம் பொதுமக்கள் பார்வையாளர் கலரி மற்றும் சபாநாயகர் விசேட விருந்தினர் கலரி என்பவற்றைத் திறப்பதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்ர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ​தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாதக் காரணத்தினால் நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைய, ஆசனங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலானது வெளியிடப்பட்டுள்ளமைக்கு அமைய நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு மாத்திரம் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லையென்பதுடன், நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி​ உருவாக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பது குறித்து சபாநாயகர் பெயரிடுவாரென்றும் நாடாளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X