Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பேர்த்தில், இலங்கை நேரப்படி நாளை காலை 8 மணிக்கு ஆரம்பிக்கிறது.
ஆஷஸின் முதலிரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு வாழ்வா, சாவா என்றவாறு குறித்த போட்டி அமைந்துள்ளதுடன், இப்போட்டியுடன் சேர்த்து 150ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவரான அலிஸ்டியர் குக் போன்ற வீரர்களின் விளையாடும் காலத்திலான திருப்புமுனைப் போட்டியாகவும் காணப்படுகிறது.
இந்த டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ள பேர்த் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று கருதப்படுகையில், மீண்டுமொரு முறை பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட், மிற்செல் மார்ஷ் ஆகியோர் ஆபத்தானவர்களாக இருக்கலாம் என்று கருதலாம். மறுபக்கம் இரண்டாவது போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் அபாரமாக செயற்பட்ட ஜேம்ஸ் அன்டர்சனும் அச்சுறுத்தலாம் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியில், துடுப்பாட்ட வீரர் பீற்றர் ஹன்ட்ஸ்கொம்பை மிற்செல் மார்ஷ் பிரதியீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு மாற்றங்கள் இருக்காது.
இங்கிலாந்து அணியில், வேகமாகப் பந்துவீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளரின் தேவை குறித்து உரையாடல்கள் இடம்பெற்றபோதும் இரண்டாவது போட்டியில் அதேயணியே இப்போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் காப்பாளர் ஜொனி பெயார்ஸ்டோ ஐந்தாமிடத்தில் துடுப்பெடுத்தாடக் கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலிய அணி: டேவிட் வோணர், கமரோன் பன்குரோப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் (அணித்தலைவர்), ஷோர்ன் மார்ஷ், மிற்செல் மார்ஷ், டிம் பெய்ன் (விக்கெட் காப்பாளர்), பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க், நேதன் லையன், ஜொஷ் ஹேசில்வூட்.
எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அணி: அலிஸ்டியக் குக், மார்க் ஸ்டோன்மன், ஜேம்ஸ் வின்ஸ், ஜோ றூட் (அணித்தலைவர்), ஜொனி பெயார்ஸ்டோ (விக்கெட் காப்பாளர்), டேவிட் மலன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிரேய்க் ஒவெர்ட்டன், ஸ்டூவர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago