2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இறுதிப் போட்டியில் றியல் மட்ரிட்

Editorial   / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படும் கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு, ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட் தகுதிபெற்றுள்ளது.

நேற்று  இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், அபுதாபிக் கழகமான அல் ஜஸிராவை வென்றதன் மூலமே இறுதிப் போட்டிக்கு றியல் மட்ரிட் சென்றுள்ளது.

இப்போட்டியின் 41ஆவது நிமிடத்தில் றொமரின்ஹோ பெற்ற கோல் காரணமாக அல் ஜஸிரா முன்னிலை பெற்றது. எனினும் 53ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கையை சமப்படுத்திய றியல் மட்ரிட், 81ஆவது நிமிடத்தில் கரித் பேல் பெற்ற கோலோடு, 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

அந்தவகையில், நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில், பிரேஸிலியக் கழகமான கிறேமியோவை றியல் மட்ரிட் எதிர்கொள்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X