Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 08 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக முன்னாள் அணித்தலைவர் தமிம் இக்பாலை அந்நாட்டு அரசாங்கம் நியமித்துள்ளது.
அமினுல் இஸ்லாமை தலைவராகக் கொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் சபையை அந்நாட்டு அரசாங்கம் கலைத்த பின்னரே தமிமை கிரிக்கெட் சபைத் தலைவராக நியமித்துள்ளது.
கடந்தாண்டு ஒக்டோபரில் நடைபெற்ற கிரிக்கெட் சபைத் தேர்தல்களுக்கெதிரான பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்த ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே பணிப்பாளர் சபை கலைக்கப்பட்டிருந்தது.
தமிம் தலைமையிலான 11 பேர் கொண்ட இடைக்கால நிர்வாக சபையில் இன்னொரு முன்னாள் அணித்தலைவர் மின்ஹஜுல் அபெடின், முன்னாள் வீரர் அதார் அலி கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
1 hours ago