2025 மே 14, புதன்கிழமை

முதியோர் பராமரிப்பு பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மாவட்ட மட்டத்தில் முதியோர் பராமரிப்பு சேவை நாடிகளை பயிற்றுவிப்பதற்காக நடாத்திய பயிற்சி நெறியில் பங்குபற்றிய 15 பயிலுநர்களுக்கு சான்றிதழ்கள் மட்டக்களப்பு புனித ஜோசப் முதியோர் இல்லத்தில்  நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்டத்தில் முதியோர் பராமரிப்புச் சேவையினை விருத்தி செய்வதே இப்பயிற்சிநெறியின் நோக்கமாகும்.
முதியோர் பராமரிப்பு உபகார சேவை பயிலுநர்களுக்கான பயிற்சிநெறி கடந்த மே மாதம் 18ஆம் திகதி முதல் 10 நாட்கள் மட்டக்களப்பில் சமூக சேவைகள், சமூக நலன்புரி, கால்நடைவள அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள தேசிய முதியோர் செயலகத்தினால் நடத்தப்பட்டது.

இப்பயிற்சிநெறியில் முதியோர் பராமரிப்பு, முதுமையில் தொடர்பாடலும், முதியோருக்கான உணவுப் பழக்கவழக்கங்கள், சுகாதாரம், தலைமைத்துவம், மனித உரிமைகளும் முதியோர் சட்டங்களும், முதுமையில் உளநலம், சமயங்களின் பார்வையில் முதியோர், உடற்கூற்றியல், முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், மாகாண சமூக சேவை திணைக்களத்தின் சேவைகள், முதியோர் இல்ல முகாமைத்துவம், சமூக சேவை, சமூக நலன்புரி, சமூகப்பணி தொடர்பான விழிப்புணர்வுகள் விசேட தேவைக்குட்பட்ட முதியோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கற்பித்தல்கள் நடைபெற்றிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .