Editorial / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ. எல். ஜவ்பர்கான்
அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,000 கோழிகளும் 400 மாடுகள் 400 ஆடுகள் இறந்திருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள உதவி பணிப்பாளர் டாக்டர் ஏ எம் அப்துல் ஹாதி தெரிவித்தார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அனர்த்த நிலை காரணமாக கால்நடைகள் இறந்துள்ளன
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான விசேட மருத்துவ முகாம் வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கட்டுமுறிவு, ஆண்டாள் குளம்,கதிரவெளி ஆகிய இடங்களில் இடம்பெற்றன
விலங்கு மருத்துவ முகாமில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் கோழிகள் என்பன பரிசோதிக்கப்பட்டதுடன் அவற்றிற்கு ஏற்பட்டுள்ள நோய்களிலிருந்து அவற்றை பாதுகாக்க மருந்துகளும் விநியோகிக்கப்பட்டன
கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஊடாக மருத்துவ முகாம் ஏற்பாடாக இருந்தது
கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் டாக்டர் ஏ எம் அப்துல் காதி தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் கால்நடை மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ் டி எம் மாஹிர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்
சுமார் 200க்கும் அதிகமான பண்ணையாளர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago