R.Tharaniya / 2025 நவம்பர் 03 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்ட விரோதமாக மாணிக்கக் கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் மஸ்கெலியா பொலிஸார் கைது செய்து உள்ளனர்.
இச் சம்பவம் சனிக்கிழமை (01) அன்று மாலை இடம் பெற்று உள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 45 வயது 52 வயது உடைய மவுஸ்ஸாக்கலை தோட்ட சீட்டன் பிரிவில் உள்ளவர்கள்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார அவர்களுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து அவரது பணிப்புரையின் படி மஸ்கெலியா பொலிஸ் பிரிவு திடீர் சுற்றி வளைப்பு ஒன்றை மவுசாகலை ஓயா பகுதியில் மேற் கொண்டனர்.
அந்த சுற்றி வளைப்பின் போது மவுஸ்ஸாக்கலை தோட்ட சீட்டன் பிரிவில் உள்ள இருவர் மாணிக்க கற்கள் அகழ்வுக்கு பயன்படுத்தபடும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டு எதிர் வரும் 5.11.2025 அன்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆகும் படி பணித்துள்ளார் .

9 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago