R.Tharaniya / 2025 நவம்பர் 04 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா, சாமிமலை கார்ட்மோர் வீதியில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் காயமடைந்து மஸ்கெலியா பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா, சாமிமலை - கார்ட்மோர் வீதியில் உள்ள டிசைட் தோட்ட அலுவலகத்திற்கு அருகில் வைத்து இவ் விபத்து நிகழ்ந்துள்ளதுடன் இதில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியின் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் .


எச். எம். சுதத் ஹேவா
12 minute ago
26 minute ago
39 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
39 minute ago
44 minute ago