Janu / 2025 நவம்பர் 12 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமனசிறி குணதிலக்க
மொனராகலை, மஹகளுகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 19 ஆம் கட்டை, கபரகொடயாய பகுதியில் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது மனைவி கோடாரியால் தாக்கியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (11) அன்று உயிரிழந்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய ஆர்.எம்.காமினி புஷ்பகுமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கணவனின் தகாத உறவால் இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், சம்பவ தினத்தன்று கணவன் விவசாய வேலைகளை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரின் தலை மீது மனைவி கோடாரியால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த கணவன் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக சந்தேக நபரான பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மஹகளுகொல்ல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பு:
'ஊடகத்துறையில் பெண்களிடையே செயற்கை நுண்ணறிவு பற்றிய புரிதல் மற்றும் அறிவை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் SAWM SLanka (South Asian women In Media) அனுசரணையில் ஒரு நாள் பயிற்சி பட்டறை, கொழும்பு மெண்டரினா ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (11) அன்று இடம்பெற்றது அதில் கற்றுக்கொண்ட சில தகவல்களின் அடிப்படையில், இந்த கேலி சித்திரம் பரீட்சார்த்தமாக வரையப்பட்டது. (நன்றி)
4 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago