2021 மே 17, திங்கட்கிழமை

நுவரெலியா பிரதேச செயலக பிரிவினை மூன்று பிரதேச செயலக பிரிவுகளாக பிரிக்க தீர்மானம்

Super User   / 2011 நவம்பர் 14 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நுவரெலியா பிரதேச  செயலக பிரிவினை மூன்று பிரதேச செயலக பிரிவுகளாக பிரிக்க உத்தேச தீர்மானம் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள், கிராம சேவகர் பிரிவுகள் என்பனவற்றின் எல்லைகளை மீள் நீர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நுவரெலியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேச செயலாளரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்; நவீன் திசாநாயக்க, பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.இராதாகிருஸ்ணன், பி.இராஜதுரை, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ்.சதாசிவம் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ்.லோரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பல்வேறு கருத்தாடல்களுக்கு பின்னர் நுவரெலியா பிரதேச செயலக பிரிவினை நுவரெலியா, தலவாக்கலை மற்றும் அக்கரப்பத்தனை என மூன்று பிரதேச செயலக பரிவுகளாக பிரிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .