2021 ஜூன் 14, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

George   / 2017 ஜூன் 09 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வரணி வீதியில் அறுந்திருந்த மின்சார வயரில் சிக்குண்ட முதியவர், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

இயற்றாலை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி சிவகுரு (வயது 71) என்ற முதியவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

முடிதிருத்தும் கடை ஒன்றை நடத்தி வரும் மேற்படி முதியவர், வழமைபோன்று கடையை பூட்டி வீட்டு, வீட்டுக்கு சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மாலை நேரத்தில், காற்றுடன் கூடிய மழையினால் வரணி வீதியில் உள்ள மின்சார இணைப்பு மீது, மரம் ஒன்று முறிந்து கீழே வீழ்ந்ததில், மின்சார வயரும் அதனுடன் அறுந்து கீழே வீழந்துள்ளது.

அறுந்து விழுந்த வயரிர் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில், அதில் சிக்குண்ட முதியவர் தூக்கி எறியப்பட்டு உயிரழந்துள்ளார்.

சடலத்தை மீட்ட அப்பகுதி இளஞர்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .