2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நீர்ப்பாசனத் திட்டங்களைப் புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 மே 02 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                           

மத்தியதர மற்றும் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களைப் புனரமைப்புச் செய்வதற்காக நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சினால் 100 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ பிரதியமைச்சர் டப்ளியூ.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார்.

ஐந்து வருடங்களுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன்,  இந்த நிதியுதவியுடன்; 300 குளங்கள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கடந்த காலங்களில் 1,885 மத்தியதர மற்றும் பாரியளவிலான நீர்ப்பாசனங்களின் வடிகான்கள், மற்றும் வாய்க்கால்கள் சேதமாகியுள்ளதகாவும்  பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X