2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தீனியாத் பரீட்சை 12ஆம் 13ஆம் 20ஆம் திகதிகளில்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 11 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

இலங்கை  பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படவுள்ள தீனியாத் பரீட்சை,  புத்தளம்  அஹதிய்யா பரீட்சார்த்திகள்   மற்றும்  மத்ரஸா மாணவர்களுக்காக   12ஆம்  13ஆம் 20ஆம் திகதிகளில்  புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில்  நடைபெறவுள்ளதாக புத்தளம் அஹதிய்யா சன்மார்க்க போதனாபீட அதிபர் எம்.எச்.எம். சலீம் மரைக்கார் தெரிவித்துள்ளார்.

மௌலவிகள், அல் ஆலிம் முடித்தவர்கள், அஹதிய்யா பாடசாலையில் மூன்று வருடங்ங்களுக்கு மேல் கற்பித்தவர்கள், உயர்தரப் பரீட்சையில் இஸ்லாம் இஸ்லாமிய நாகரீகம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தியுடன் மூன்று பாடங்களில் சித்தி பெற்றவர்கள்  தீனியாத் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X