2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் மக்களுக்கு ரூ.180 கோடி செலவில் குடிநீர்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 15 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்காக குழாய் மூலம் பாலாவியிலிருந்து புத்தளம் நகருக்கு குடிநீரை கொண்டு வருவதற்கென 180 கோடி ரூபா செலவில் விசேட அபிவிருத்தி திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

1997ஆம் ஆண்டு புத்தளம் நகரசபைத் தலைவராக இருந்த கே.ஏ.பாயிஸ் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தபோதிலும், அப்போது நிறைவேற்ற முடியாமலிருந்தது.

நகரசபைக்கு மீண்டும் தலைவராக தெரிவாகியுள்ள கே.ஏ.பாயிஸ் இதுவரை காலமும் கைவிடப்பட்ட நிலையிலிருந்த இந்தத் திட்டத்தை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  இது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில்  புத்தளம் நகரசபையில் நடைபெற்றதாகவும் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X