2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கான வேலைத்திட்டத்தின் கீழ் 20 வீடுகள் அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2011 ஜூலை 19 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

தேசத்திற்கு  மகுடம் தேசிய கண்காட்சி வேலைத்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்தினுள் புதிதாக இரண்டாயிரம் வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு இவ்வீடுகளை அமைத்துக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் இரண்டு லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதுடன் பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எதிர்வரும் தினங்களில் இவ்வேலைத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அநுராதபுரம் மாவட்டம் முழுவதிலும் 46 நடமாடும் சேவைகளை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளதோடு வீதி அபிவிருத்தி,  நீர்ப்பாசனம் உட்பட சகல துறைகளிலும் அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X