Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஏப்ரல் 20 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'ஹிறிமல் அவுருத்த – 2011' பெயரில் நடைபெறும் புத்தாண்டுத் திருவிழா எதிர்வரும் 26 ஆம் திகதி அநுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெற உள்ளது.
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்திப் பிரதி அமைச்சரின் அனுசரனையுடன் நடைபெறும் இவ் விழாவுக்காக பிரதான அதிதியாக இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கலந்து கொள்வார்.
துவிச்சக்கர வண்டிப் போட்டி, வழுக்கு மரத்தில் ஏறும் போட்டி, கலசத்திற்கு அடித்தல் போட்டி உட்பட சிங்கள மற்றும் தமிழ் கலாசசாரப் போட்டிகள் இவ்விழாவின் போது நடைபெற உள்ளன.
ஊனமுற்ற படையினர்களுக்காக நடைபெறும் முச்சக்கரவண்டி போட்டி மற்றும் ஸ்ரீ லங்கா யுத் புத்தாண்டு அழகு ராணிப் போட்டி உட்பட வேறு பல புதுமையான போட்டிகளும் நடைபெற உள்ளன.
இவ் விழாவில் நடைபெறும் சகல போட்டிகளிலும் பணப்பரிசுகள் உட்பட மிகப் பெறுமதியான பரிசுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்விழாவின் போது, நடைபெறும் அழகு ராணிப் போட்டியில் தெரிவு செய்யப்படுபவர்களுக்காக இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் 35,000- பெறுமதியான அழகுகலைப் பயிற்சியினைப் பெறுவதற்கான இரண்டு புலமைப் பரிசுகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
35 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago