2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வீதிகள் புனரமைப்பிற்கு 30 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு

Kogilavani   / 2011 ஜூன் 06 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

தலாவ பிரதேச சபைக்குட்பட்ட பழைய வீதிகள் இரண்டு, மஹாவலி வீதிகள் மூன்று உட்பட ஐந்து வீதிகளை பிரதான வீதிகளாக புனரமைப்புச் செய்ய 30 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலாவ பிரதேச சபைத் தலைவர் உபாலி குணவர்தன தெரிவித்தார்.

இதன்படி தலாவ  நபடவௌ  இந்திகஸ் பொத்தான உலுக்குளம் ஊடாக புத்தளம் வீதியின் 10 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

பஹலதலாவ சந்தியிலிருந்து இலந்தன் குளம் ஊடாக புத்தளம் வீதியினைத் தொடும் 4 கிலோமீற்றர் வீதியும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதேவேளை,     தலாவ        ஜயகங்கை      முதல்; கிரிகொள்ளேகம நெலும் தோட்டகம பஹல்கம ஊடான 6 கிலோமீற்றா வீதியும் இஹலவௌ சந்தியிலிருந்து ரன்தொட்டகம ஊடான 6 கிலோமீற்றர் வீதியும் தெல்நேகமவிலிருந்து குடாபெல்லன்கடவள ஊடான முருநாகல் வீதியினை இணைக்கும் 4 கிலோமீற்றர் வீதியும் அபிவிருத்தி   செய்யப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X