2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பஸ் விபத்தில் ஒருவர் பலி; 30பேர் காயம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 16 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அநுராதபுரத்திலிருந்து ரத்கம நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று வரகாபொல பிரதேசத்தில் வைத்து கென்டர் ரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 30பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் ஏழு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகளே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் வரகாபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X