2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புத்தளம் தேர்தல் பணிகளில் 4,500 பேர்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 16 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் மாவட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பணிகளுக்காக சுமார் 4,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்காக 3,000 பேரும் வாக்குகள்  எண்ணும்  கடமைகளுக்காக 1,500 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டது.

புத்தளம் மாவட்டத்தில் இரு நகரசபைக்கும்  10 பிரதேசசபைக்குமான வேட்புமனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டன. இதில் சிலாபம் நகரசபை, சிலாபம் பிரதேசசபை, நவகத்தேகம பிரதேசசபை,  வென்னப்புவ  பிரதேசசபை ஆகிய நான்கு சபைகளுக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏனைய 10 சபைகளுக்கே சுமார் 4,500 பேர் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X