2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ரூ.18 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத கூட்டு வலைகள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 03 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

கற்பிட்டி, நுரைச்சோலை கரையோரப் பிரதேசத்தில் மீன்பிடி அதிகாரசபை உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது சுமார் 18 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத கூட்டு வலைகள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.

மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த வலைகள் மூலம் குறித்த கடற்பிரதேசத்தில் மீன்பிடிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே குறித்த சுற்றிவளைப்புத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர்கள் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள போதிலும் அவர்களால் அவ்விடத்தில் விட்டுச் செல்லப்பட்ட 104 கூட்டு வலைகளை மீன்பிடி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் கைப்பற்றியுள்ளனர். 

கூட்டுவலைகளை வீசி மீன்பிடித்தலில் ஈடுபடுவதால் கடற்பரப்பில் உள்ள மிகச் சிறிய மீனினங்கள் கூட அந்த வலைக்கு அகப்பட்டு விடுகின்றன. இதனால் மீனினங்கள் அழிவைச் சந்திக்க வேண்டி ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X