2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பெரியசந்தி கிராம தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலைக்கு கட்டிடம் கையளிப்பு

A.P.Mathan   / 2011 மார்ச் 15 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

கற்பிட்டி பிரதேசத்துக்குட்பட்ட பெரியசந்தி கிராம தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலையின் முதலாவது நிரந்தர கட்டிடம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரினால் திறந்து வைக்கப்பட்டது.

வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரின் 16 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டதுடன் சமூக நம்பிக்கை நிதியத்தினால் ஒரு தொகுதி தளபாடங்களும் கையளிக்கப்பட்டன.

இவ் வைபவத்தில் கல்வி திணைக்கள அதிகாரிகளும், சமூக நம்பிக்கை நிதிய அதிகாரிகளும் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X