2025 ஜூலை 21, திங்கட்கிழமை

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது: அநுராதபுரம் தேர்தல் தெரிவத்தா

Super User   / 2011 மார்ச் 16 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பதினைந்து பிரதேச சபைகளுக்கும் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான எச்.எம்.கே.ஹேரத் தெரிவித்தார்.

அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலத்தில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை இன்று புதன்கிழமை காலை முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு வருகிறன.

அநுராதபுரம் மாநகர சபை மற்றும் நீதிமன்ற தீர்ப்பின் படி அநுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேசம், ராஜாங்கனை, கல்நேவ பிரதேச சபைகள் தவிர்ந்த ஏனைய 15 பிரதேச சபைகளுக்கும் நாளை வியாழக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது.

இப்பதினைந்து பிரதேச சபைகளுக்கும் 449,022 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு 402 வாக்களிப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X