Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 22 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நுரைச்சோலையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)
"இன்றைய தினம் நாம் திறந்த லக்விஜய அனல் மின்சார நிலையம் நீண்டகாலமாக நாம் எதிர்பார்த்திருந்ததாகும். 2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நாம் எமது தாய் நாட்டை படிப்படியாக அபிவிருத்தியின் பால் இட்டு சென்றுள்ளோம்.இந்த மின்சார நிலையத்தை திறப்பதன் மூலம் நாட்டின் பல துறைகள் முன்னேற்றமடைவுள்ளது. 1980 ஆண்டு முதல் இதன் தேவை இருந்தது. ஆனால் அரசியல் ரீதியில் தோல்வி காணும் என்பதால் இது நடைமுறைப்படுத்தப்படாமலிருந்தது. நாம் சிரமங்களுக்கு மத்தியில் தான் மக்களுக்கான பணிகளை செய்கின்றோம்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
புத்தளம் நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட அனல் மின்சார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
முதற்கட்டமாக தேசிய மின்சாரத்துக்கு 300 மெகா வோல்ட் மின்சாரம் இந்த அனல் மின் நிலையத்திலிருந்து பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.சீன அரசாங்கத்தின் உதவியின் கீழ் இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது.
ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மேலும் பேசுகையில் கூறியதாவது:
'நாட்டின் அபிவிருத்தியினை முன்னெடுத்து செல்வதற்கு மின்சக்தி என்பது மிகவும் முக்கியமானது. சோவியத் ரஷ்யாவை எடுத்துக் கொண்டால் என்ன ஏனைய நாடுகளை எடுத்துக் கொண்டாலும் என்ன எல்லா நாடுகளும் மின்சாரத்தை மையப்படுத்தியே முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
எனக்கு ஞாபகமிருக்கின்றது... அன்று ஆட்சியில் இருந்த அரசாங்கம் இத்திட்டத்தை பின் தள்ளிக் கொண்டிருந்தது.1980 ஆண்டு முதல் இதன் தேவை இருந்தது. ஆனால் அரசியல் ரீதியில் தோல்வி காணும் என்பதால் இதனை நடைமுறைப்படுத்தப்படாமலிருந்துது. நாம் சிரமங்களுக்கு மத்தியில் தான் மக்களுக்கான பணிகளை செய்கின்றோம்.
விடுதலை புலிகளுக்கு எதிராக நாம் போர் தொடுத்து கொண்டிருக்கும் போது 2006 ஆம் ஆண்டு தான் அதற்கான அடிக்கல்லை நட்டினோம். இதுமட்டுமல்ல, கெரவலபிட்டி, மேல் கொத்மலை இவ்வருட இறுதியில் அவற்றை நிறைவு செய்வோம்.
இந்த மின்நிலையம் 2014 ஆம் ஆண்டு வரும் போது 600 மெகா வோர்ட் உற்பத்தி செய்யப்படும்.மின்சாரமற்ற நாடுகள் எமது வலயத்தில் இல்லைஇமாற்று மின்சார உற்பத்தி நிலையங்களை உருவாக்க நடவடிக்கையெடுக்கப்படும். இப்பகுதியில் காற்றாலை மின்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இருளினை ஒளியின் மூலம் அகற்றினால் போதாது. மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதனை பயன்படுத்த வேண்டும். எமது வளத்தை வெளிநாடுகளும் நுகரும் நிலையினை தோற்றுவிக்க வேண்டும். நகரங்களை இணைக்கும் ஒன்றாக மின்சாரம் பயன்படும். மின்சாரம் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டங்களுக்கு இடமில்லை. அன்று யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவரும் போது அதற்கு எதிராக செயற்பட்டவர்கள் இன்று அபிவிருத்திக்கு எதிராக செயற்படுவது வேதனையாக இருக்கின்றது.
ஜீ.எஸ்.ரி கிடைக்கக் கூடாது என்று சர்வதேசத்துக்கு சென்று பேசியவாகள் இலங்கைக்கு முதலீட்டாளர்கள் வரும் போது அவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்பவர்கள் நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்களாக இருக்கும் வரைக்கும் மக்கள் அவர்களை புறக்கணிப்பார்கள்.அதனை தான் அவர்கள் தற்போதைய தேர்தல்களில் செய்துள்ளனர்.நாம் உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்துவோம்.மக்கள் எமக்கு தொடர்ந்து ஆணை தருகின்றனர்.
நாம் இப்போது செய்ய வேண்டியது எமது நாட்டை ஒளிமயமானதாக மாற்றுவது தான்.1971 ஆம் அண்டு1980ஆம் ஆண்டுகளிலும் மற்றும் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளாலும் அரசியல் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக இழந்தவை ஏராளம், அதன் மூலம் நாம் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளோம். அதனை தற்போது மாற்றியுள்ளோம்.
அதிவேக பாதைகள், துறைமுகங்கள் இதரமான சர்வதேச விளையாட்டு மைதானம் என்பன இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளனது. இது தான் எமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. எமது நாட்டை நாளை ஒளியமாக்கும் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பது தான் காலத்தின் தேவையாகும்.
எமது நாட்டில் இல்லாமல் ஆக்கப்பட்ட பல விடயங்களை மீண்டும் எமது காலத்தில் குவித்திருக்கின்றோம்.அதே போல் எமது நாட்டையும் மக்களையும் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கான புதிய தேசத்தை உருவாக்குகின்ற பொறுப்பை நாம் சுமந்துள்ளோம். அதனை உணர்ந்து பொறுப்புடன் நாம் செயற்படுகின்றோம்' என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
(Pix by : Sudath Silva)
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago