2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நகரசபை நடவடிக்கைகள் திறந்த சபை நடவடிக்கைகளாக அமையும்

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம்  நகரசபை நடவடிக்கைகளை  மூடிய அறைக்குள் நடைபெறும் இரகசிய நடவடிக்கைகளாக அமைக்காது திறந்த சபை நடவடிக்கைகளாக அமைப்போம் என்று புத்தளம் நகரசபை தலைவர்   கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

புத்தளம் நகர சபையின் ஏப்ரல் மாத சபை அமர்வு புத்தளம் நகரசபை சபா மண்டபத்தில் தலைவர் கே.ஏ.பாயிஸ் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழம இடம்பெற்றது. இக் கூட்டத்தில் உரையாற்றியபோதே பாயிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

நகரசபை உறுப்பினர்கள் அனுமதி பெற்றுக்கொண்டு எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ள முடியும். ஊழியர்களின் கூட்டங்கள் கூட மட்டுப்பபடுத்தப்படவில்லை.

நகரசபைக்கு சொந்தமான இடத்தில் ஞாயிறு சந்தை இடம்பெறுமாயின் வெளியாரின் தலையீடுகள் இருக்காது. புத்தளம் நகரசபை விடயங்களில் வெளியாரோ அல்லது வெளி நிறுவனங்களோ தலையீடு செய்வது இஸ்தீர நிலையை எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் எதிர்காலத்தில் புத்தளம் நகரசபையூடாக பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம் என்று கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X