2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கப்புகொள்ளேவ பிரதேசத்தில் சரணாலயம்

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தின் கப்புகொள்ளேவ பிரதேசத்தில் கமநல சேவைகள் மற்றும் வனஜீவ அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் ஆலோசனைப்படி புதிய சரணாலயம் ஒன்றினை அமைக்க வனஜீவராசிகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

சரணாலயம் அமைக்கப்படவுள்ள பிரதேசத்தை அண்டியுள்ள மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு சரணாலயம் அமைக்கப்படவுள்ளதுடன் சுமார் எட்டாயிரம் ஏக்கரில் இச்சரணாலயம் அமையப் பெறவுள்ளது.

வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் உட்பட ஏனைய பகுதிகளில் வசிக்கும் காட்டு யானைகள் சுதந்திரமாக வாழ இச்சரணாலயத்தினூடாக வழியேற்படும் எனவும் வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X