2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோயை தடுப்பதற்கான நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வடமத்திய மாகாணத்தில் அதிகரித்து வரும் சிறுநீரக நோயினைத் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  வடமத்திய மாகாண சுகாதார அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.

சிறுநீரக நோய் அதிகரித்துக் காணப்படும் பகுதிகளுக்கு பவுஸர் மூலம் சுத்தமான குடிநீர்; வழங்கும் துரித திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை வடமத்திய மாகாண சிறுநீரக நோய்த் தடுப்புப் பிரிவினால் தந்திரிமலை, கெப்பித்திகொள்ளாவ, மதவாச்சி, மிஹிந்தலை, பதவிய, மெதிரிகிரிய, திம்புலாகல, வெலிகந்த ஆகிய பகுதிகளில் க்ப்ளினிக்குகள் மற்றும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடமத்திய மாகாணத்தில் இதுவரை 20,000 பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X