2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அஹதிய்யா பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                               

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட அஹதிய்யாப் பாடசாலைகளின் இடைநிலைப் பரீட்சைகளுக்குத் தோற்றி சித்தியடைந்த அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

அநுராதபுரம் மாவட்ட அஹதிய்யா சம்மேளத்தின் தலைவர் எம்.ஏ.எம். டில்ஷானின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அநுராதபுரம் மாவட்ட குவாஸி நீதிமன்றத்தின் நீதிபதியும் அநுராதபுரம் மாவட்ட உலமா சபையின் தலைவருமான அல்ஹாஜ் எஸ்.எல்.ஏ.சத்தார், அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி என்.எஸ்.மர்லியா உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X