2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்க தூதுவராலய அதிகாரிகள் - புத்தளம் நகர சபை தலைவர் சந்திப்பு

Super User   / 2011 ஏப்ரல் 19 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல்லாஹ், எம்.என்.எம்.ஹிஜாஸ்)

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலய அதிகாரிகளுக்கும் புத்தளம் நகர சபை  தலைவர் கே.ஏ.பாயிஸிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை புத்தளம் நகர சபையில் இடம்பெற்றது.

இதன்போது புத்தளம் நகர அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

புத்தளம் நகர சபை செயலாளர் மற்றும் வட மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இத்தூதுக்குழுவினர் புத்தளம் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினரையும் சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்புக்களில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலய பிரதி பிரதான உத்தியோகத்தர் வெலரி  சீ. பௌலர் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X